ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்..!ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியின் முனாந் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பயங்காரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மற்றவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025