சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா..?
சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் என்று தகவல்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது.
திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறிவருகின்றார்கள்.
இந்த திரைப்படத்தில் வாத்தியாராக ரங்கன் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்திருப்பார். அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில், பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்தியராஜ் தானம். சத்யராஜ் சில திரைப்படங்களில் கமிட் ஆகிருந்ததால் அவரால் நடிக்கமுடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.