இந்தியா, இலங்கை இடையில் முதல் டி20 போட்டி..!
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையில் முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளும் இடையில் முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது.
இந்திய அணியின் உத்தேச பட்டியல்:
பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, சாஹல்.