எனக்கு தியேட்டர்களில் படம் வெளியாக தான் ஆசை – ஐஸ்வர்யா ராஜேஷ்.!
திரையரங்குகளில் படம் வெளியாகத்தான் எனக்கு ஆசை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்துள்ள திரைப்படம் திட்டம் இரண்டு. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்ப்பை பெற்று, யூடிப்பில் 8 லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் நேரடியாக வருகிற 30-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது “இந்த திரைப்படத்தில் நான் புதிய முயற்சி எடுத்து நடித்துள்ளேன். போலீசாக நடித்துள்ளதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்க்கு நன்றி. இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கொரோனா பரவல் காலகட்டத்தில் சினிமா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாகத்தான் எனக்கு ஆசை. ஆனால் சூழ்நிலை எதுவாக இல்லாததால் அது நடக்காமல் உள்ளது.
ஒரு திரைப்படம் நன்றாக இருந்தாலும், அது மக்களுக்கு சென்றடைந்து விடுகிறது. ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதை வெளியிடாமல் இருந்தால் அது தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும். சூரரை போற்று, க/பெ.ரணசிங்கம் சார்பட்ட பரம்பரை போன்ற படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.