பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ பேசக்கூடாது -போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை..!

Default Image

பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ, பேசக்கூடாது என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மகளிர் மாநகர போக்குவரத்து கழக சாதாரண கட்டண பேருந்களில் எந்தவித பயண அட்டை இல்லாமலும் கட்டணம் இன்றி பயணம் மேற்கொள்ள வரும்போது மாநகர போக்குவரத்து கழக அனைத்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் போக்குவரத்து துறை அளித்துள்ள 7 நிலையான இயக்க நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1.பயணிகள் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.

2. ஓட்டுனர் பேருந்தை குறித்த பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்தத்திற்கு முன்போ/ தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

3. நடத்துனர்கள் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று ஏறும் பெண் பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக்கூடாது.

4. வயது முதிர்ந்த மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

5. பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ, பேசக்கூடாது.

6. பேருந்தில் பெண்பயணிகளிடம் உபசரிப்புடனும், அளி்புடனும் நடத்துக் கொள்ள வேண்டும்.

7. பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து ஒட்டுனருக்கு சமிக்ஞை (signal) செய்து பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Phil Salt & Tim David CATCH
Punjab Kings vs Chennai Super Kings
LPG Price Hike
MI vs RCB win
Rohit Sharma dismissed rcb