பாடலாசிரியர் சினேகனுக்கு காதலியுடன் டும்..டும்..டும்..!

நடிகை கன்னிகா, கவிஞர் சினேகன் காதல் திருமணம் ஜூலை 29ல் சென்னையில் நடக்கிறது
பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி , மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செய்யலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய கொள்ள உள்ளனர். இவர்களது திருமணம் வரும் 29-ஆம் தேதி காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகை கன்னிகா ரவி சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025