இன்று ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு- CISCE அறிவிப்பு..!

Default Image

இன்று ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்திருந்தது. சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது.

இந்நிலையில், உள் மதிப்பீட்டுக் கொள்கை அடிப்படையில் ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி வகுப்பு 10 மற்றும் வகுப்பு 12 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என்று இந்திய பள்ளி சான்றிதழ் கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் cisce.org மற்றும் results.cisce.org ஆகிய அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்