மகாராஷ்டிரா நிலச்சரிவில் 44 பேர் பலி..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ராய்கட் மாவட்டத்தில் உள்ள தலாய் மற்றும் மலாய் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கியவர்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெறுகின்றது.
மேலும், மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 8 உயிரிழந்துள்ளதாகவும் 2 பேரை தேடும் பணி தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.