ஆர்ஆர்ஆர் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்.??

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள். மேலும் அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
பிரமோஷன் பாடலுக்கான படப்பிடிப்பு மட்டும் நடைபெறவுள்ளது. இது முடிந்துவிட்டால் படத்தின் அணைத்து படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது நிலையில், படத்திற்கு இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று மேக்கிங் வீடியோவில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் தற்போது, டாக்டர், பீஸ்ட், விக்ரம், ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025