தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில், கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள, திண்டுக்கல், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்ள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
- தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- கர்நாடகா, கேரளா, வட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பவத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல் பழநிகளில் பலந்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைடெயே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் வருகின்ற இன்று முதல் வருகின்ற 26-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.