30 வயதிற்கு பின்பும் ஆரோக்கியமாக இருக்க விரும்பும் பெண்களுக்கான குறிப்புகள்…!

பெண்கள் பராமரிப்பு   – தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை மட்டும் அல்லாமல் அலுவலக வேலைக்கும் செல்லக் கூடியவர்களாக தான் இருக்கின்றனர். எனவே, இரட்டிப்பாக வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் வேலையை மட்டும் பார்க்காமல், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் நமது வேலைகளை மட்டும் பார்த்து விட்டு , உடல் நாளடைவில் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாக ரத்தசோகை, மூட்டு வலி, இடுப்பு வலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இது போன்ற பிரச்சினைகளால் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்களாம்.  எனவே, 30 வயதிற்குப் பின்பும் உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான உதவிக் குறிப்புகளை இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கால்சியம் உணவுகள்

அனைவருக்குமே ஞாபாகம் இருக்கும், நமது குழந்தை பருவத்தில் அதிகளவு பால் குடிக்க ஆசைப்படுவோம். ஆனால், வயதாகும் பொழுது பால் குடிப்பது அவ்வளவாக பிடிப்பதில்லை. எனவே அதை தவிர்த்து விடுகிறோம். ஆனால், அவ்வாறு இருக்கக் கூடாது. ஏன் என்றால் பாலில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது.

எனவே நிறைய பால் குடிக்க வேண்டும். அதே போல கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். இது நமது எலும்பு வலுவாக இருப்பதற்கு உதவுகிறது. பால் குடிக்காவிட்டால் சீஸ் அல்லது தயிரை சேர்த்து கொள்ளலாம். இந்த கால்சியம் சத்துக்கள் தான் நமக்கு வயது செல்லும் பொழுது நல்ல எலும்பு உறுதியை கொடுக்க உதவுகிறது.

சன்ஸ்கிரீன்

சன்ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியின் கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். இது சூரிய ஒளியின் கதிர்வீச்சு சருமத்துக்குள் செல்லாமல் பாதுகாக்க உதவுகிறது. தொடர்ந்து சன்ஸ்கிரீனை பயன்படுத்தி வரும் பொழுது சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

மேலும் இந்த சன் ஸ்க்ரீனை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லும் பொழுது பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் பொழுது புற ஊதா கதிர்கள் காரணமாக ஏற்படக்கூடிய தோல் புற்றுநோய் ஏற்படாது.

உடற்பயிற்சி

30 வயதை தாண்டிய பிறகு பெண்களுக்கு தானாகவே எடை அதிகரிக்கும். எனவே பெண்கள் முப்பது வயதைக் கடந்து விட்ட பிறகு தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய தொடங்க வேண்டும் .30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது பிஸியாக இருந்தால் பத்து நிமிடமாவது உடற்பயிற்சி ஏதாவது தினமும் செய்வது மிகவும் நல்லது

தூக்கம்

பெரும்பாலும் பெண்களுக்கு 30 வயதை கடக்கும் பொழுது பொறுப்புகள் அதிகரிக்கும். அதன் காரணமாக முழுமையாக பெண்களால் தூங்க முடியாது. இரவு நீண்ட நேரம் கழித்து உறங்க செல்லும் பெண்கள் காலையில் நேரமே எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள். எனவே புத்துணர்ச்சியுடன் உணர வேண்டுமானால் 30 வயதை கடந்த பெண்கள் நிச்சயம் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதுதான் அவர்களது உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும் இவ்வாறு தூக்கமின்மை காரணமாக தான் எடை அதிகரிப்பும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

எடை

30 வயதை கடக்க கூடிய பெண்கள் நிச்சயம் தங்களது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில் தான் உடல் எடை அதிகரிக்கவும் தொடங்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் தான் தசைகள் தளர்வடைய தொடங்கும். இதனால் எடை தானாகவே அதிகரிக்கும். எனவே உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

கண் பராமரிப்பு

40 வயதை கடந்து விட்ட அனைவருக்குமே கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏதாவது ஒன்று தற்போது இருக்கத்தான் செய்கிறது. இதற்கு வருமுன் காக்கும் விதமாக 30 வயதை நாம் கடக்கும் போது கண்களுக்கான பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும்.

பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். 30 வயதை கடந்த பின்பு கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். ஏதேனும் சிறியதாக பிரச்சனை தொடங்கும் போதே அதை சரி செய்வதற்கான மருந்துகள் அல்லது உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

பெண்கள் தங்களது 30 வயதிற்குப் பின்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் மேற்குறிப்பிட்ட வழி முறைகளை கடைபிடிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளலாம், கண் பரிசோதனை செய்யலாம், சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம், கால்சியம் உணவுகளை அவ்வப்போது உட்கொள்ளலாம், அதுபோல கிடைக்கின்ற நேரங்களில் உறங்கலாம். இவை உங்கள் உடல் மேலும் ஆரோக்கியமாக நீண்ட நாட்களுக்கு வலிமையுடன் இருப்பதற்கு உதவும்.

author avatar
Rebekal