ஒரு கப் சேமியா இருந்தால் போதும்…. 5 நிமிடத்தில் மொரு மொருப்பான ஸ்நாக்ஸ் தயார்!
மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் விரும்புவது வழக்கம் தான். அதற்காக நாம் கடைகளில் சென்று பணத்தை கொடுத்து வடை, முறுக்கு என வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையான முறையில் சுலபமாக தின்பண்டங்களை தயாரிக்க முடியும். இதற்கு ஒரு கப் சேமியா இருந்தால் போதும், எப்படி அட்டகாசமான மொரு மொரு சேமியா வடை செய்வது என என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- சேமியா
- வெங்காயம்
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- பச்சை மிளகாய்
- இஞ்சி பூண்டு விழுது
- உப்பு
- மைதா
- எண்ணெய்
செய்முறை
வேக வைத்தல் : முதலில் ஒரு கப் சேமியாவை எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு இரண்டு கப் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்து, அதில் சேமியாவை போட்டு சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.
மாவு தயாரிப்பு : அதன் பின் வடித்து வைத்துள்ள சேமியாவுடன் கருவேப்பிலை, வெங்காயம் உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, 3ஸ்பூன் மைதா மாவு ஆகியவற்றை சேர்த்து லேசாக பிசைந்துக் கொள்ளவும்.இந்த கலவையை ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
பொரித்தல் : பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் பிடித்து வைத்த சேமியா உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். அட்டகாசமான ஸ்னாக்ஸ் தயார்.