பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் – 4 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!!
சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வறுமைகோட்டியிற்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பலருக்கு 2 லட்சத்து 11 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இல்லாத போலியான நபர்கள் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் குடிசை மாற்றுவாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிசை மாற்று பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா மற்றும் உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2017 முதல் 2019 வரை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில், இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், முறைகேடு செய்த பணத்தை அதிகாரிகள் 4 பேரும் பங்கிட்டு கொள்ள முயற்சி செய்ததாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துறை ரீதியாக விசாரணை நடத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.