LIVE:இந்தியா VS கவுண்டி செலக்ட் லெவன் – 3 விக்கெட்டை இழந்த கவுண்டி அணி…!

Default Image

டர்ஹாமில் நடைபெற்று வரும் இந்தியா VS கவுண்டி செலக்ட் லெவன் அணிகளுக்கிடையேயான ஸ்கோர் விபரம் பின்வருமாறு:

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.அதன் படி,நடைபெற்ற அப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

டெஸ்ட் போட்டிகள்:

இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

பயிற்சி ஆட்டம்:

டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

அந்த வகையில்,டர்ஹாமில்,கவுண்டி லெவன் அணியுடன் நேற்று நடைபெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இந்த போட்டிகளில் விராட் கோலி இல்லாததால்,ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக உள்ளார்.

அதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா,லிண்டன் ஜேம்ஸின் பந்துவீச்சில் ஜாக் கார்சன் பிடித்த கேட்ச் மூலம் 9 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.அவரை தொடர்ந்து,மாயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி என அடுத்தடுத்து குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்,கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட் இழப்பை தடுத்தனர்.மேலும், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் போட்டியில் சதமடித்து அசத்தினார். அதன்பின்னர் 101 ரன்கள் எடுத்த ராகுல் ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடிய ஜடேஜாவும் 75 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து,முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.மேலும்,இங்கிலாந்தின் கவுண்டி லெவன் அணி சார்பாக கிரேக் மைல்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில்,இரண்டாம் ஆட்டத்தில் தற்போது களமிறங்கியுள்ள கவுண்டி லெவன் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.மேலும்,267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் இந்திய அணி சார்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் முதல் விக்கெட்டை எடுத்தார்.பின்னர்,பும்ராவும்,சிராஜும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.தற்போது உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்