சாதனங்களை ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம் – ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை…!
ஆப்பிள் சாதனங்களை ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஆப்பிள் ஐபோன், மடிக்கணினிகள் மற்றும் ஐபாட்கள் போன்றவற்றில் கைரேகை,கிருமிகள் உள்ளிட்டவை இருப்பதால் அவற்றை சுத்தம் செய்வது சரியான முடிவுதான்.ஆனால்,அவ்வாறு சுத்தம் செய்யும்போது நாம் சில விசயங்களை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
அந்த வகையில்,எவ்வாறு சுத்தம் செய்வது என்று ஆப்பிள் நிறுவனம் தற்போது சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.அதன்படி,
- ஆப்பிள் ஐபோனை சுத்தம் செய்ய ப்ளீச் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது .மேக்ஸ்,மற்றும் ஐபாட்கள் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களுக்கு இந்த விதி பொருந்தும்.
- அதற்கு பதிலாக, ஆப்பிள் பயனர்கள் க்ளோராக்ஸ் துடைப்பான்கள், 70% ஐசோபிரைல் ஆல்கஹால் துடைப்பான்கள் அல்லது 75% எத்தில் ஆல்கஹால் துடைப்பான்களைப்(ethyl alcohol wipe) பயன்படுத்த வேண்டும்.
- மேலும்,சாதனங்களை மிகவும் அழுத்தி துடைப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனெனில்,இது சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
- மென்மையான, பஞ்சு இல்லாத துணியை மட்டுமே பயன்படுத்துங்கள். சிராய்ப்பு துணி,ஈரமான துணிகள் போன்ற பொருட்களை தவிர்க்கவும்.
- பயனர்கள் தங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை திரவ கிருமிநாசினியில் மூழ்கடிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது கிருமிநாசினியை நேரடியாக சாதனங்கள் மீது தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- ஏரோசல் ஸ்ப்ரேக்கள், ப்ளீச் அல்லது கிளீனர்களை நேரடியாக ஆப்பிள் சாதனங்களில் தெளிக்க வேண்டாம்.
- கைகளில் அணிந்துள்ள மோதிரம் உள்ளிட்ட அணிகலன்களை கழற்றி வைத்து விட்டு,பின்பு ஆப்பிள் சாதனங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Rachat de véhicule sans contrôle technique