காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா…?

exercise

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது பல நன்மைகள் பெறுவதற்கு வழிவகுக்கும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை நமக்கு அதிக அளவில் அள்ளிக் கொடுக்கிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் முக்கியமான 5 நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மனநிலை மேம்பாடு

காலை எழுந்ததும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே நாம் காலை எழுந்ததும் அன்றைய நாளில் வேலைகளை எப்படி சுறுசுறுப்பாக செய்யப்போகிறோம் என்ற ஒரு புத்துணர்வு நமது மூளையில் இருக்காது. எனவே காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி ஏதாவது செய்யும் பொழுது நமது மனநிலை மேம்படுத்தப்பட்டு நமது மூளை செரோடோனின் எனும் ஹார்மோனை உருவாக்கும். இது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுவதுடன், நமது மனநிலையையும் மேம்படுத்துகிறது.

நம்பிக்கை

காலை எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது அன்றைய நாளில் செய்ய வேண்டிய கடினமான வேலையாக இருந்தாலும், இது என்னால் செய்து முடிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள் உருவாகுமாம். நம்பிக்கை மட்டுமல்லாமல், சுயமரியாதையும் உருவாக்குவதற்கு இந்த காலை நேர உடற்பயிற்சி உதவுகிறது. நாம் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியமாக, பிட்டாக இருப்பதற்கு இது உதவுகிறது என கூறப்படுகிறது.

ஆற்றல்

நமக்கு ஆற்றலை கொடுப்பதற்கு தேவையான நமது உடலில் காணப்படக் கூடிய கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு ஆகியவை பயன்படுத்தப்படுவதற்கு கூட ஆக்சிஜனேற்றம் செயல் நடைபெற வேண்டுமாம். இந்த செயல்முறையை ஊக்குவிக்க காலை நேர நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி உதவும் என கூறப்படுகிறது. காலை உணவுக்கு முன் 60 நிமிட உடற்பயிற்சி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என கூறப்படுகிறது.

நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என நினைப்பவர்கள் நிச்சயம் இந்த காலை நேர உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். காலை நேரத்தில் உணவுக்கு முன்பாக நாம் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் நமது உடலுக்கு கிடைக்குமாம்.

இரத்த அழுத்தம்

அதிகாலையில் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இவ்வாறு மாரடைப்பு ஏற்படக் கூடாது என்றால், நமது இரத்த அழுத்தம் குறைவாக இருக்க வேண்டும். எனவே காலை நேரத்தில் எழுந்து உடற்பயிற்சிகள் செய்வது இரத்த அழுத்தத்தை 10 சதவீதம் குறைப்பதாக கூறப்படுகிறது. எனவே அதிக அளவு இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயம் காலை நேரத்தில் ஏதேனும் ஒரு சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் இது நமது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay