சச்சின் பிறந்தநாளன்று அசிங்கப்படுத்திய ஆஸ்திரலியா கிரிக்கெட்!சர்ச்சைக்குரிய ட்விட்டால் கொந்தளித்த ரசிகர்கள் !
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். சமூகவலைத்தளங்கள் வழியாகப் பிரபலங்கள் சச்சினுக்கு வாழ்த்துகளைக் கூறிவருகிறார்கள்.
இன்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமின் ஃபிளமிங்கின் பிறந்தநாளும் கூட. இதற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் தளத்தில் பிளமிங்குக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஃபிளமிங், சச்சினை க்ளீன் போல்ட் செய்யும் காணொளியை அத்துடன் வெளியிட்டுள்ளது.
சச்சின் பிறந்தநாளன்று அவரை அவமானப்படுத்துவதற்காக இதுபோன்ற ஒரு காணொளியை வெளியிட்டுள்ளதாக சச்சின் ரசிகர்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ஃபிளமிங் பந்துவீச்சை சச்சின் நொறுக்கியெடுக்கும் காணொளிக்காட்சிகளையும் இணைத்து தங்கள் எதிர்வினையை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Some @bowlologist gold from the man himself – happy birthday, Damien Fleming! pic.twitter.com/YcoYA8GNOD
— cricket.com.au (@cricketcomau) April 24, 2018