சுதந்திர தின விழா விருந்தாக தொலைக்காட்சியில் வெளியாகும் கர்ணன்.!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிங்கர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்திருந்தார். லட்சுமி பிரியா சந்திரமௌலி, நட்டி, கௌரி கிஷன், லால் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று தனுஷிற்கு முதல் நாளில் அதிகம் வசூல் தந்த திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில், இந்த திரைப்படம் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
அதாவது, வருகின்ற ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025