தொழிற்படிப்பு – முதலமைச்சரிடம் அறிக்கை அளிக்கிறது ஆய்வு குழு!
தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் முதலமைச்சரிடம் சமர்பிக்கிறார்.
தமிழகத்தில் பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவு பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தொழிற்படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆய்வு குழு சமர்பிக்கிறது.
தொழிற்படிப்புகளில் உள் ஒதுக்கீடு அளிப்பதா அல்லது சேர்க்கையில் முன்னுரிமை வழங்குவதா என குழு ஆய்வு நடத்தியுள்ளது. எனவே நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.