மருத்துவ படிப்புக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேருவதற்காக 7.5% உள் இடஒதுக்கீடு இருந்து வருகிறது. இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து புதுக்கோட்டை மாணவி ராஜஸ்ரீ என்பவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, தமிழக்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்த காரணத்தினால், முந்தைய அதிமுக தலைமையிலான தமிழக அரசு, அரசு பள்ளி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.