பன்னீர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது தானா? அறியலாம் வாருங்கள்…!

Default Image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் ஒன்று பன்னீர். இந்த பன்னீரில் அதிக அளவில் சத்துகள் அடங்கியுள்ளது. இந்த பன்னீர் சாப்பிடுவது நல்லது தானா? இதில் உள்ள தீமைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சத்துக்கள்

பன்னீரில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ, செலினியம், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

நன்மைகள்

பன்னீரில் அதிக அளவு கால்சியம் காணப்படுவதன் காரணமாக இது எலும்புகளுக்கு வலு கொடுக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல், மூட்டு வலியை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் ஆண்களுக்கு இந்த பன்னீர் அதிக அளவில் உதவுகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய புற்று நோயைப் போக்குவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது.

மேலும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவாக உள்ளவர்களுக்கு, விந்தணு எண்ணிக்கையை இது அதிகரிக்கச் செய்கிறது. இதன் காரணமாக ஆண்மை குறைவு குணப்படுகிறது. மேலும் இந்த பன்னீரில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதால் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த பன்னீரை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு காணப்படும் பல் சொத்தையை நீக்குவதிலும் இந்த பன்னீர் மிகவும் உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை இந்த பன்னீரை செய்து கொடுக்கலாம்.

கவனத்திற்கு …

பன்னீரை அதிக உடல் எடை கொண்டவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள் குறைந்த அளவில்தான் உட்கொள்ளவேண்டும். இதில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் ஏற்கனவே கொழுப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகி விடும்.

மேலும், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எனவே தினமும் சாப்பிடுபவர்களாக இருந்தால் வழக்கமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். எனவே, உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படும். மேலும் செரிமான அமைப்பில் இது பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே தொடர்ச்சியான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்