#BREAKING: காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு ..!

Default Image

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி -குண்டாறு இணைப்பு மூலம் தமிழகத்தில் கூடுதலாக 45 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் எங்களுக்கு காவிரி இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் அளவு குறைந்துவிடும் என்ற காரணத்தினால் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு இந்த திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி ,குண்டாறு, வைகை அணை இணைப்பு திட்டத்தால் வெள்ள காலங்களில் காவிரியில் உபரி நீராக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் தடுத்து. திருச்,சி தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசனக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதியில் நீர்வளம், நிலவளம் பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

கர்நாடக அரசின் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

1958- ஆம் ஆண்டு காவிரி, குண்டாறு, வைகை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 2008ஆம் ஆண்டு ரூ.3290 கோடியில் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை 14,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்போவதாக கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்