அமைச்சருக்கு கொரோனா.., தனிமைப்படுத்தி கொண்ட பிரதமர் போரிஸ் ஜான்சன் ..!

சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்திற்கு தொற்று உறுதியானதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முதல் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இங்கிலாந்தில் கொரோனா முதல் அலை போது கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தொற்று உறுதியாகிசிகிக்சை பெற்று பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போதும் கொரோனா அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் சஜீத் ஜாவீத்துடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா அறிகுறி தென்பட சஜீத் ஜாவீத்திற்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது.
சஜீத் ஜாவீத் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சஜீத் ஜாவீத்திற்கு தொற்று உறுதியானதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முதல் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.