12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியீடு…! 8,16,473 பேர் தேர்ச்சி..! 1,656 பேர் தேர்ச்சியடையவில்லை…!

Default Image

12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி அடைந்தோர் மற்றும் தேர்ச்சியடையாதோர் விபரம். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக்களை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற 8 லட்சம் மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். முதல்முறையாக தசம எண்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது மதிப்பெண் குறித்த விபரங்களை,

12-ம் வகுப்பு மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும் எனவும், வரும் 22-ம் தேதி காலை 11 மணிக்கு மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 8,16,473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 4,35,973 பெண்களும், 3,80,500 ஆண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 11ம் வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், 551 -600 மதிபெண்க்ளை 39,679 மாணவர்களும், 501 – 550 மதிப்பெண்களை 1,63,133 மாணவர்களும், 451 – 500 மதிப்பெண்களை 2,22,522 மாணவர்களும், 401 – 450 மதிப்பெண்களை 2,08,016 மாணவர்களும், 351 – 400 மதிப்பெண்களை 1,39,579 மாணவர்களும் பெற்றுள்ளனர். மேலும், மதிப்பெண்ணில் திருப்தியடையாத மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today
Sri lanka President Anura kumara Dissanayake