மீண்டும் தேர்வு எழுதலாம்.. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

Default Image

கொரோனா காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்தை தொடர்ந்து, மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

2020-21ம் கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை சென்னை டிஜிபி வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, மாணவர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி பதிவு செய்து www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,  www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ்  வாயிலாகவும் அனுப்பப்படும். பிளஸ் 2 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதன் முறையாக தசம (decimal) எண்களில் வெளியிடப்பட்ட்டுள்ளது. உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க இந்தாண்டு தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 பேர் என்றும் மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்தி அடையவில்லை என்றால் மீண்டும் தேர்வு எழுதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, 10ம் வகுப்பு தேர்வில் 50%, பிளஸ் 1 தேர்வில் 20%, பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30% என்ற அடிப்படையில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 22ம் தேதி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணைதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்