சென்னையில் நாளை தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடவில்லை-மாநகராட்சி அறிவிப்பு..!

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னையில் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க பல நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிக கவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வருகிறது.
சென்னையில் 40-க்கும் மேற்ப்பட்ட மையங்களில் மக்களுக்கு கொரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025