மீண்டும் பெரியத்திரைக்கு திரும்பியுள்ளார் பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ்..!

Default Image

ஜித்தன் ரமேஷ் தற்போது மீண்டும் படத்தில் கதாநாயகராக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனும், முன்னணி நடிகர் ஜீவாவின் சகோதரருமான நடிகர் ஜித்தன் ரமேஷ் தற்போது மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளார்.  இவர் ஜித்தன் என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும், இந்த படம் வெற்றிப்படமாக மாறியது. இவர் ஜெர்ரி, நீ வேணுண்டா செல்லம், புலி வருது, பிள்ளையார் கோவில் முதல் தெரு, ஜித்தன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியாகவில்லை. இதன் பின்னர் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தற்போது மீண்டும் திரைக்கு வந்துள்ளார்.

இவரின் தயாரிப்பு நிறுவனமான மஸ்ட் வாட்ச் என்ற நிறுவனத்தில் இவரே கதாநாயகராக நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் கண்ணா இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்