இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை…!
இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தமிழகத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 19-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன், இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.