நீண்டநாள் காதலியை மணந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்…!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,தனது நீண்டநாள் காதலியை நேற்று திருமணம் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சிவம் துபே,அவரது நீண்டநாள் காதலியான அஞ்சும் கானை நேற்று (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து,திருமண விழாவில் எடுத்த சில புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம்,பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். மேலும்,திருமணம் குறித்து சிவம் கூறுகையில்: “நாங்கள் அன்பை விட அதிகமான அளவு நேசித்தோம்,இப்போது,எங்களது வாழ்க்கை தொடங்குகிறது.”என்று பதிவிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by shivam dube (@dubeshivam)

இதனைத் தொடர்ந்து,சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான டி-20  போட்டியில் சிவம் இந்தியாவில் அறிமுகமானார்.இதுவரை அவர் 13 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.அதில் அவர் அரைசதம் அடித்துள்ளார் மற்றும் 3/30 சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளார்.இதைத் தவிர 2019 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்