முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள்…! ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி…! வீடியோ உள்ளே…!
முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள் வரைந்த ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி.
இன்று ஒப்பனை கலைஞர்கள் தங்களது திறமைகளை பயன்படுத்தி பலவிதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒப்பனை கலைஞர் மிமி சோய் என்பவர் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி, தனது முகம் முழுவதும் கண்கள், லிப்ஸ்டிக் அடிக்கப்பட்ட உதடுகள் மற்றும் மூக்குகளை வரைந்துள்ளார். இதனை பார்க்கும் போது அவரது முகத்தில், உண்மையான கண்கள், மூக்கு, வாய் எங்கு உள்ளது என்றே தெரியவில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இது குறித்து அவர் தனது பதிவில் கூறுகையில், இதை செய்து முடிக்க 8 மணி நேரம் ஆனதாகவும், இதனை வரைந்து முடிப்பதற்குள் தான் 3 முறை மயங்கி விழுந்ததாகவும், தலையில் வரையும் போது மயக்கம் மற்றும் குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram