திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம் – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்!!
எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி விளை நிலங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான், மண்ணைவிட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார்.
கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரையிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணாகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விவசாய நிலங்களின் இடையே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் நிறுவனம் (Gas Authority of India Limited) திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அப்போது, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தக் திட்டம் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இருப்பதால், விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிய உத்தரவிடப்பட்டது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும், கெயில் நிறுவனம் எரியாயுக் குழாய் அமைத்தால், வியசாயிகளின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் விவசாய சார்ந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தனர்.
இதன்பின் கெயில் நிறுவன தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் எரிவாயு குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக எரிவாய்க் குழாய்களைப் பதிக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பதிக்கப்பட்ட குழாய்களை உடடிையாக அப்புறப்படுத்த வேண்டுபென்றும், இதற்கான இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் முடிவெடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக எரிவாயுக் குழாய்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு பிரதமருக்கு வலியுறுத்தினோம். இதனையடுத்து, விவசாயிகள் போராட்டம் காரணமாக இந்தத் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், அண்மையில் ஒரூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயிகள் நிலங்கள் இடையே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிருஷ்மணாகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்தத் திட்டம் புதிதாக அமைக்கப்பட உள்ள தர்மபுரி-ஓசூர் நான்கு வழி சாலையில் சாலையோரம் அமைக்கப்பட வேண்டுமென்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு. ‘திட்டத்திற்காக மக்கள் அல்ல, மக்களுக்காகவே திட்டம்’ என்பதன் அடிப்படையில், விலை நிலங்களின் இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓாமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைசார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை. pic.twitter.com/sDO6lZy0th
— AIADMK (@AIADMKOfficial) July 17, 2021