டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீர் சந்திப்பு!
டெல்லியில் பிரதமர் மோடியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் திடீர் சந்தித்து ஆலோசித்து வருகிறார். எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி பதவிக்கு சரத் பவாரை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட சரத் பவாருக்கு திட்டம் இல்லை என தேசியவாத காங்கிரஸும் மறுத்திருந்த நிலையில், தற்போது பிரதமருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.