ஞாயிறு, விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கம் – நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் நாளை முதல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படவுள்ளன. மெட்ரோ இரயில் சேவைகள் அனைத்து ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிகிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ இரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் (Peak Hours) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் (Non-poak bours) 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் இரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த 21 முதல் நேற்று வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 46 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.9200 வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும், மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
Extension of Metro Train Services from 07.00 am to 10.00 pm on Sundays and Government Public Holidays from tomorrow, (18.07.2021) with several safety measures pic.twitter.com/Q7cyoKqGnc
— Chennai Metro Rail (@cmrlofficial) July 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025