ஆபாச நட்சத்திரம் டக்லியா ஸ்கை உயிரிழந்தார்..!

600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் நடித்த டக்லியா ஸ்கை உயிரிழந்தார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சான் பெர்னாண்டோவில் 31 வயதான டக்லியா ஒரு காரில் இறந்து கிடந்தார். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். டக்லியா தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஜூன் 30 அன்று ஆபாச நட்சத்திரம் டக்லியாவின் உடல் மீட்கப்பட்டதாகவும், தற்போது விசாரணை தற்கொலை கோணத்தில் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. டக்லியா ஸ்கை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், சமீபகாலமாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
18+ திரைப்படத் தயாரிப்பாளர் ஹான்ஸ் உள்ளூர் ஊடகங்களுடன் டக்லியா ஸ்கை புற்றுநோயுடன் போரிடுவது குறித்து பேசினார். ‘நோயின் போது, வாழ்க்கையைப் பற்றி நான் அவரிடம் பலமுறை பேசினேன் என்று அவர் கூறினார். ஜனவரி 22 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் டக்லியா கடைசியாக ஒரு வெள்ளை நிறத்தில் ஆடையில் போஸ் கொடுத்து ‘என் ஆடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என பதிவிட்டு இருந்தார்.
இப்போது பயனர்கள் அவரது அந்த புகைப்படத்திற்கு கருத்து தெரிவிக்கின்றனர். 600 க்கும் மேற்பட்ட 18+ படங்களில் டக்லியா ஸ்கை நடித்தார். இந்த ஆண்டின் சிறந்த பெண் நடிகருக்கான விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025