டால்பி அட்மோஸ்,இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வசதி;போகோ எஃப் 3 ஜிடி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி …!
போகோ எஃப் 3 ஜிடி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி,சிறப்பம்சங்கள் குறித்து காண்போம்.
பிரபல போகோ ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய
போகோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும்,இதில் டால்பி அட்மோஸுடன் இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன என்பதை நிறுவனம் தெரிவித்துள்ளது.போகோ பிராண்டின் கீழ் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வசதியுடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.
போகோ எஃப் 3 ஜிடி மாடலானது ரெட்மி கே 40 கேமிங் பதிப்பை போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக ஏப்ரல் மாதம் சீனாவில் ரெட்மி கே 40 இன் கேமிங் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சம்:
இந்த போகோ ஸ்மார்ட்போன் ‘ஸ்லிப்ஸ்ட்ரீம் வடிவமைப்பு’ மற்றும் ‘ஆன்டி -பிங்கர் பிரிண்ட்’ வசதியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.இதன் ஃப்ரேம் (frame) விண்வெளி-தர அலுமினிய அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது மீடியா டெக் டைமன்ஷன் 1200 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
முன்னதாக,சில்வர் மற்றும் பிரிடேட்டர் பிளாக் நிறங்களில் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று போகோ இந்தியா பகிர்ந்து கொண்டது.
போகோ எஃப் 3 ஜிடி, 120 பிக்ச் அமிரெட் டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு (refresh rate), எச்டிஆர் (HDR) 10+ மற்றும் டிசி டிம்மிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.மேலும்,இது முன்பக்க கேமரா 16 MP மற்றும் பின்புற கேமரா 64 MP வசதியைக் கொண்டுள்ளது.
இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி,5065 எம்ஏஎச் (mAh) பேட்டரி, 67W வேகமான சார்ஜிங் வசதி,ஐபி 53 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு அம்சம் போன்றவற்றையும் கொண்டுள்ளது.மேலும்,இது 5 ஜி, வைஃபை, ஜி.பி.எஸ், என்.எஃப்.சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இதன் விலை ரூ.30,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.