65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்!!

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்.

டிசம்பர் மாதம் வரை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு வழங்க மத்திய முடிவு செய்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோடெக்கிடம் 28.8 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை பெற மத்திய அரசு முடிவு செய்து ஒப்பந்தத்தை இறுதி செய்தது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205க்கும், கோவாக்சின் தடுப்புசி ரூ.215க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்