சேமியாவில் பிரியாணி செய்வது எப்படி என தெரியுமா…?
சேமியா பலருக்கும் பிடித்த ஒரு உணவு தான். சேமியாவில் எப்பொழுதுமே காய்கறிகளைப் போட்டு விரவி சாப்பிட்டிருப்போம். வெங்காயம் தக்காளியுடன் வதக்கி சாப்பிட்டிருப்போம். வெறும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இந்த சேமியாவில் அட்டகாசமான பிரியாணி எப்படி செய்வது என்று தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- சேமியா
- தக்காளி
- கரம் மசாலா
- பட்டை
- வெங்காயம்
- கிராம்பு
- ஏலக்காய்
- மல்லி புதினா
- முட்டை
- உப்பு
- பிரியாணி மசாலா
- எலுமிச்சை
செய்முறை
முதலில் சேமியாவை ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், பட்டை ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தாளிக்கவும். தக்காளி லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின் இவற்றுடன் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றவேண்டும். இதனுடன் லேசாக மிளகாய் தூளும் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் மல்லி மற்றும் புதினா சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். பின் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை நீங்கியதும் லேசாக எலுமிச்சை சாறு ஊற்றி சேமியாவை அவித்து இதனுடன் கிளறவும். சிறிது நேரம் மிதமான தீயில் வைத்துக் கிளறி எடுத்தால் அட்டகாசமான சேமியா பிரியாணி தயார். இன்று காலை உணவுக்கு இதை செய்து பாருங்கள்.