துருக்கியில் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு..!

Default Image

துருக்கியில் ஆயிரக்கணக்கான ப்ளமிங்கோ பறவைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பறவைகள் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துருக்கியின் கொன்யா பகுதியில் இருக்கும் இரண்டாவது பெரிய ஏரியான டஸ் ஏரியில் வலசைப்பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்த உவர் ஏரிக்கு வரக்கூடிய நீரை சிலர் அவர்களது பகுதிகளுக்கு திருப்பி கொண்டதால் வறண்டு கிடப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணத்தால் இந்த வறண்ட பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செல்கக் பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளர்கள் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, ஏரி நீரில் உவர் தன்மை அதிகரித்து அதனால் பறவைகள் பறக்க முடியாமல் இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

மனிதர்களுக்கு ஏற்ற படி, சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வதால் தற்போது 1,000 கணக்கான ஒன்றும் அறியா பிளமிங்கோ பறவைகள் உயிர் மடிந்து கிடக்கிறது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்