தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து, இந்த பதவியில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் அறிவித்தார். இந்நிலையில், பாஜக புதிய தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை பதவியேற்றுக்கொண்டார்.

 

author avatar
murugan