தூக்கிலிடுவதே மரணதண்டனையை நிறைவேற்ற பொருத்தமானது!மத்திய அரசு
மத்திய அரசு, மரணதண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி சிறார் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அவசரச் சட்டம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
சிறாரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபணமானால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது
நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவசரச்சட்டத்துக்கு ஒப்புதல்போக்சோ சட்டத்தில் பயனுள்ள திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மத்திய அரசு, மரணதண்டனையை நிறைவேற்ற தூக்கிலிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்துள்ளது. தண்டனை முறையை மாற்றக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுடுவது, விஷஊசி முறையைவிட தூக்கிலிடுவது பொருத்தமானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.