‘MAY I HELP YOU’ – கோவை காவல் நிலையங்களில் பெண் காவல் வரவேற்பாளர்கள்…!

Default Image

 கோவை காவல் நிலையங்களில் பெண் காவல் வரவேற்பாளர்கள்.

கோவை மாநகர் பகுதியில் உள்ள 15 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் இரண்டு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்களில் இன்று முதல் சுழற்சி முறையில் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுகின்றன.

இவர்களுக்கு 18 லேப்டப்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றனர். மேலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் இவர்கள் கனிவாக நடந்து கொண்டு பிரச்சினையை உள்வாங்கி புகார்களை பெறுகின்றன. கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த பெண் காவலர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அமர்ந்திருக்கும் மேஜைகளில் ‘MAY I HELP YOU?’ என்ற பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்