#BREAKING: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் ..!
தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரி டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மனு கொடுத்தார்.
அப்போது, தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கூடுதலாக தமிழகத்தில் 4 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டு 14 நகரங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு நடப்பாண்டில் 18 நகரங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய புதிய 4 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்ததாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
4. The number of cities have increased to 18 from last year’s 14. The number of examination centres will also be increased. @Subramanian_ma
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 15, 2021