சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யும் வாழைத்தண்டில் எப்படி பொரியல் செய்வது…?

வாழைத்தண்டு பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாழை தண்டை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதுடன், சிறுநீரக எரிச்சலையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துவதில் இந்த வாழைத்தண்டு அதிக அளவில் உதவுகிறது. இந்த வாழைத்தண்டை வைத்து எப்படி அருமையான பொரியல் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- வாழைத்தண்டு
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- மல்லித் தூள்
- சின்ன வெங்காயம்
- உளுந்தம் பருப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கடுகு
செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் வாழைத்தண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக வாழைத் தண்டுடன் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும், வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பாசிப் பருப்பை கழுவி அதன் தண்ணீரை இந்த வாழைத்தண்டுடன் சேர்த்து நன்கு கிளறவும். அல்லது சாதாரண தண்ணீரும் ஊற்றலாம். இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும்.
நன்றாக அவிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான வாழைத்தண்டு பொரியல் வீட்டிலேயே தயா.ர் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த வாழைத்தண்டை சாப்பிட்டால் விரைவில் சிறுநீரக கோளாறுகள் நீங்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த வாழைத்தண்டு பொரியலை சாப்பிடலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025