லிப்ஸ்டிக் விரும்பியா நீங்கள்…? அதை வாங்குவதற்கு முன் இந்த குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Default Image

பெண்கள் தங்கள் முக அழகை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று விரும்புவது வழக்கம். இதற்காக பல அழகு சாதனங்களைப் பெண்கள் விலைகொடுத்து வாங்கி உபயோகிக்கின்றனர். குறிப்பாக அழகு சாதனங்களில் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது உதட்டுச்சாயம் என்று சொல்லக்கூடிய லிப்ஸ்டிக் தான். முன்பெல்லாம் லிப்ஸ்டிக் என்றால் சிவப்பு நிறம் தான் ஆனால், தற்பொழுது இது வெறும் சிவப்பு நிறத்தில் மட்டும் இருந்து விடுவதில்லை.

 

ஒவ்வொரு உடைக்கும், இடத்திற்கும், சூழலுக்கும் தகுந்தவாறு வெவ்வேறு நிறங்களில் உதட்டுச் சாயங்கள் தற்பொழுது வந்துவிட்டது. இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் பெண்கள் யாரும் இதை உபயோகிப்பதை இன்னும் நிறுத்திவிடவில்லை. உதட்டுச் சாயம் பூசினால் தான் வெளியில் செல்ல முடியும் என்ற அளவுக்கு இதற்கு அடிமையாகிவிட்டனர். இதில் அதிகளவில் உடலுக்கு தீமை விளைவிக்க கூடிய ரசாயனங்கள் தான் உபயோகப்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து தற்பொழுது நாம் அறிந்து கொள்ளலாம்.

தீங்கு விளைவிக்கும் லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்கில் மாங்கனீசு, காட்மியம், குரோமியம் மற்றும் அலுமினியம் ஆகியவை அதிகளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் மூலமாக நாம் லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவிக் கொண்டு பின்பு உணவு உண்ணும்பொழுது நேரடியாக இவை உடலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது.

மேலும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த லிப்ஸ்டிக் உபயோகிப்பதும் ஒரு காரணமாக அமைகிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் உதட்டு சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி மிகவும் அவசியம் என்றாலும் மூலிகை உதட்டு சாயங்களை பயன்படுத்தலாம்.

கவனிக்க வேண்டியவை

லிப்ஸ்டிக் உபயோகிக்கும் பொழுது அடர்த்தியான நிறங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்குகளில் தான் தீங்கு தரும் இரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுகிறது. மேலும், லிப்ஸ்டிக்கை பூசுவதற்கு முன் நெய் அல்லது வாஸ்லின் அதாவது பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை உபயோகிப்பதும் நல்லது. விலை மலிவாக உள்ளது என்பதற்காக தரம் குறைவான லிப்ஸ்டிக்குகளை வாங்காமல் ஒன்று வாங்கினாலும் நல்ல தரமானதை வாங்கி உபயோகியுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)