தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? – ப.சிதம்பரம்
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? என ப.சிதம்பரம் ட்வீட்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்தும், கொரோனா தடுப்பு நடைமுறைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புதிய மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இதற்கு முன் இருந்த அதிகாரிகள் நடந்து கொண்டதுபோல தான் நடந்து கொள்கிறார். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ஒவ்வொரு மாநிலங்களும் புகார் அளிக்கிறது. தடுப்பூசி மையங்களில், “NO VACCINES” என்ற பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த வரும் மக்கள், தடுப்பூசி போடாமல் வீடு திரும்புகின்றனர்.
தடுப்பூசி பற்றாக்குறை குறித்து புகார் அளித்த அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும் பொய் சொல்கிறார்களா? தடுப்பூசி இல்லாததால் மக்கள் திருப்பி விடப்படுவதாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி அறிக்கைகள் போலியான தகவல்களை கூறுகிறதா? மத்தியிலும், மாநிலங்களுக்கும் இடையே மக்கள் முட்டாள்கள் போல தோற்றமளிக்கப்படுகிறார்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
The conclusion is that between the Centre and the States, the people are being made to look like fools
— P. Chidambaram (@PChidambaram_IN) July 15, 2021