இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 581 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,09,87,880 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 41,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3,014 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,09,87,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 581 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,11,989 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 39,130 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,43,850 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,32,041 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாடு முழுவதும் இதுவரை 39,13,40,491 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,கடந்த 24 மணி நேரத்தில் 34,97,058 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.