புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் – மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்!!

புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் கூடியது. அப்போது, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயில புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ஆம் தேதி, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்