சிறுமி மித்ரா: உயிர்காக்கும் மருந்துக்கு வரி விலக்கு – நிதியமைச்சருக்கு, வானதி சீனிவாசன் நன்றி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்த கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மித்ரா (Autosomal Recessive Spinal Muscular Atropy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது.
சிறுமியின் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் (zolgensma) என்ற ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை ரூ.16 கோடி என்றும் அதனை இந்தியாவில் இறக்குமதி செய்ய, ரூ.6 கோடி வரி செலுத்த வேண்டும் எனவும் கூறினர். பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்த நிதி மூலம் ரூ.16 கோடி சேர்ந்தது.
ஆனால், பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்திற்கு மட்டுமே சரியாக உள்ளது. இதனால் சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்தின் மீதான இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து கிடைக்கும் என பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்தவகையில், தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சிறுமி மித்ராவிற்கான மருந்து இறக்குமதி வரி ரத்த செய்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொலைபேசி வாயிலாக பேசினேன் என்றும் அவர் உதவுவதாக தாயுள்ளத்துடன் பரிவோடு கூறியுள்ளார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கான மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்க நன்றி
Smt @nsitharaman .சிறுமி மித்ராவின் மருந்துக்கு இறக்குமதி வரியை ரத்து செய்து குழந்தைக்கு இன்னொரு தாயாக மாறினீர்கள்.
Thank you for waiving the import duty for life saving drug of
Selvi .Mitra of Erode .
???????? https://t.co/U6lqs4EMhp— Vanathi Srinivasan (@VanathiBJP) July 14, 2021