#BREAKING : கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறவில்லை – இந்திய ராணுவம்..!
கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் நமது படைகளோ , சீனப் படைகளோ அத்துமீறிவில்லை என இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன படையினர் அத்துமீறியதாகவும், இந்திய படைகள் குவிக்கப்பட்டதாகவும் வெளியான தகவலுக்கு இடையில் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கில் சீனப் படைகள் அத்துமீறலில் ஈடுபடவில்லை. சர்ச்சைக்குரிய பகுதியை தாண்டி இந்திய படைகளும் செல்லவில்லை எனவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பிப்ரவரியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து இரு நாட்டுப் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.