சொகுசு கார் விவகாரம்: நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்!!

Default Image

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் அபாரம் விதித்த நிலையில், எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து.

காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்பவர்களை நடிகன் என்று பார்ப்பது தவறு. அவர்களின் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடும் போது அதை விமர்சனம் செய்ய கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ல் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த, நீதிபதி சுப்பிரமணியம் மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தார். அதனை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் கட்டுங்க விஜய் மற்றும் வரி ஏய்ப்பு விஜய் போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆனது. இதில், விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொங்குநாடு என பிரிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது, பிரிக்கவும் காங்கிரஸ் கட்சி விடாது என்றும் கூறியுள்ளார். மேலும், கொங்குநாடு என கூறி தமிழ்நாட்டை பிரிக்க நினைப்பது விஷமத்தனமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்